முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இந்த இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


இதன்போது இரண்டு கைக் குண்டுகள், 02 ஆர்.ஜி.பி. தோட்டாக்கள், 05 60 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்க்கப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது