மாஸ்டர் ட்ரைலர் அப்டேட்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்

தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் தான்.
இதனை குறித்து வெப்கேம் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் பேசிய இவர்மாஸ்டர் ட்ரைலர் பற்றி தான் நினைத்து கொண்டே இருக்கிறேன். முதலில் வீட்டிற்குள் பத்திரமாக இருப்போம். சில சிக்கல்கள் இருக்கிறது, அது முடிந்ததும் கண்டிப்பாக மாஸ்டர் ட்ரைலர் வெளிவரும்" என கூறியுள்ளார் .
மேலும் மாஸ்டர் படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜிடம் எப்போது ட்ரைலர் வெளிவரும் என கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் "நீ ஒருத்தன் போதும். இப்போதைக்கு வீட்டிற்குள் நலமாக இருப்போம்" என்று நண்பனிடம் உரையாடும் வகையில் டுவிட் செய்துள்ளார்.