Apple வைத்த ஆப்பு; இனிமேல் iPhone 8, iPhone 8 Plus-ஐ வாங்க முடியாது! ஏன்?

ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone SE 2020-ஐ அறிமுகம் செய்த கையோடு iPhone 8 மற்றும் iPhone 8 Plus விற்பனையை நிறுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எஸ்இ 2020-ஐ அறிமுகப்படுத்தியது. இருப்பினும், ஆப்பிளின் இரண்டாவது பட்ஜெட் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, நிறுவனம் அதன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவற்றின் விற்பனையை நிறுத்தியுள்ளது. 

ஐபோன் எஸ்இ 2020 ஆனது அடிப்படையில் பிளஸ் பதிப்பு இல்லாத ஐபோன் 8 க்கு அடுத்தபடியான மாடலாக இருப்பதால் இது ஒன்றும் எதிர்பாராத ஒரு நடவடிக்கை அல்ல.
மேக்ரூமர்ஸின் கூற்றுப்படி, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களை இனி ஆப்பிள் நிறுவனத்தால் விற்கப்பட மாட்டாது. ஆனால் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இ-காமர்ஸ் வலைத்தளங்களில் கிடைக்கும், மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆகியவை செப்டம்பர் 2017 இல் ஐபோன் எக்ஸ் உடன் வெளியிடப்பட்டன. பின்னர் ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆனது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் வாரிசுகளாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2020) பற்றி பேசும்போது இந்த புதிய ஐபோன் எஸ்இ மாடலானது முதலில் ஐபோன் எஸ்இ 2 என்று அறிமுகம் ஆகுமென்று கூறப்பட்டது பின்னர் அது ஐபோன் 9 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகின, ஆனால் இது ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2020) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் ஆகியுள்ளது.

இது ஐபோன் 8 மற்றும் முந்தைய வழக்கமான ஐபோன் மாடல்களில் இருக்கும் 4.7 இன்ச் அளவை தக்க வைத்துக் கொண்டுள்ளது, நிச்சயமாக பிளஸ் மாடலில் காணப்பட்ட அளவை அல்ல.
மிகவும் மலிவு மாடலாக இருந்தாலும் கூட இந்த புதிய ஐபோன் ஆப்பிள் ஏ 13 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது, இது ஐபோன் 11 தொடருக்கு சக்தி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் எஸ்இ (2020) ஆனது ஐஓஎஸ் 13 மற்றும் டச் ஐடி பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் வருகிறது.