9 வயது சிறுமி ஒருவருக்கு கொரானா!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரொனா தொற்றாளர்களில் ஒருவர் 9 வயது சிறுமியாவார்.
புத்தளம் அல் காசிம் வீட்டுத் திட்டத்தை சேர்ந்த இந்த சிறுமி, தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

மின்னேரியா, கட்டுகெலிய பகுதி இராணுவ முகாமில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனத தாயாருடன் சிறுமியும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது சிறுமி சிகிச்சைக்கா அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அல் காசிம் வீட்டுத் திட்டத்தை சேர்ந்த 62 வயதான ஒருவர் அண்மையில் இந்தோனேஷிய சென்று வந்திருந்தார். இதன்பின்னர், புத்தளத்தின் முதலாவது கொரொனா தொற்றாளராக அவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் மன்னார் தாராபுரம் பகுதியில் மரணச்சடங்கிலும் கலந்து கொண்டிருந்தார்.

அவரது மகனும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.