கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!


நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் எனவும், மற்றையவர் கொழும்பு-08 பகுதியைச் சேர்ந்த 96 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.